2024 ஆம் ஆண்டுக்கான கல்வி பொதுத் தராதர சாதாரணதர பரீட்சைக்கான விண்ணப்பங்கள் இன்று(23) முதல் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளன.
அதற்கமைய, இன்று முதல் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை ஒன்லைன் ஊடாக மாத்திரம் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
அனைத்து பாடசாலை பரீட்சார்த்திகளும் தமது பாடசாலை அதிபர் ஊடாகவும் தனிப்பட்ட பரீட்சார்த்திகள் தாமாகவும் விண்ணப்பிக்க முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை பரீட்சைக்கு விண்ணப்பிக்கும் தனிப்பட்ட பரீட்சார்த்திகளுக்கு தேசிய அடையாள அட்டை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தேசிய அடையாள அட்டை இல்லாத 15 வயதுக்குட்பட்ட பரீட்சார்த்திகள், விண்ணப்பங்களை சமர்ப்பிக்க பரீட்சைகள் திணைக்களத்திற்கு சமூகமளிக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் கால எல்லை எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது எனவும் பரீட்சை திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.
