இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி இன்று நடைபெறவுள்ளது.
கொழும்பு ஆர்.பிரேமதாச மைதானத்தில் பிற்பகல் 2.30 மணிக்கு போட்டி ஆரம்பமாகவுள்ளது.
இலங்கை மற்றும் சிம்பாப்வே அணிகளுக்கிடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி ஜனவரி 6 ஆம் திகதி நடைபெற்றது. எனினும், மழை காரணமாக போட்டி கைவிடப்பட்டது.
இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 50 ஓவர்கள் நிறைவில், 9 விக்கெட்டுகளை இழந்து 273 ஓட்டங்களைப் பெற்றது.
பின்னர் 274 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய சிப்பாப்வே அணி 4 ஓவர்களில் இரண்டு விக்கெட்டுகளை இழந்து 12 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது மழை குறுக்கிட்டதால் போட்டி நிறுத்தப்பட்டது.