2027 பட்ஜட் மலையக மக்களுக்கு கிடைத்த வரப்பிரசாதம்: கிட்ணன் செல்வராஜ் புகழாரம்

தோட்டத் தொழிலாளர்களுக்கான 200 ரூபா மானியக் கொடுப்பனவு 2027ஆம் ஆண்டு வரவு-செலவுத் திட்டத்தில் நீக்கப்படும் என எதிரணிகள் பல்வேறு இடங்களில் பிரசாரம் செய்திருந்த போதிலும், தோட்டத் தொழிலாளர்களுக்கான சம்பள உயர்வை ஜனாதிபதி வரவு-செலவுத் திட்ட உரையில் உறுதிப்படுத்தியுள்ளார். எனவே, இந்த வரவு-செலவுத் திட்டம் மலையக மக்களுக்குக் கிடைத்துள்ள வரப்பிரசாதமாகும் என தேசிய மக்கள் சக்தியின் பதுளை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், பெருந்தோட்டத்துறை அபிவிருத்திக்காக 13,000 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மலையக மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கான பல்வேறு திட்டங்களும் முன்மொழியப்பட்டுள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

மேலும் கருத்துத் தெரிவித்த அவர், வரவு-செலவுத் திட்டத்தில் இடம்பெற்றுள்ள இத்தகைய சாதகமான விடயங்கள் எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களின் கவனத்திற்குத் தென்படவில்லை போலும் எனக் குறிப்பிட்டார்.

வரவு-செலவுத் திட்டத்தில் விமர்சிப்பதற்கு உருப்படியான விடயங்கள் எதுவும் இல்லாத காரணத்தினாலேயே எதிரணியினர் அர்த்தமற்ற கருத்துகளை முன்வைத்து வருவதாகவும் கிட்ணன் செல்வராஜ் தெரிவித்தார்.

Video thumbnail
தேயிலை தொழிற்சாலைக்குள் அதிரடியாக புகுந்த அமைச்சர் ஜீவன்!
02:50
Video thumbnail
ரூ. 1,700 இல்லையேல் தக்க பாடம் புகட்டுவோம்! தோட்ட தொழிலாளர்கள் கொந்தளிப்பு
03:37
Video thumbnail
வெடுக்குநாறி மலை சிவராத்திரி பூஜையை, இனவாதம் ரீதியில் விமர்சித்த விமல்!
04:13
Video thumbnail
தொல்பொருள் திணைக்கள அதிகாரிகளின் அடாவடி! வவுனியாவில் அட்டகாசம்! வெளுத்து வாங்கிய சாணக்கியன்
07:58
Video thumbnail
மதச் சுதந்திரம் வடக்கிற்கும் தெற்கிற்கும் சமமாக இருக்க வேண்டும்! வெடுக்குநாறி மலைச் சம்பவம்.!
07:54
Video thumbnail
இப்படி ஒரு பண்டிகை இலங்கையில இருக்கா🤭😳😲#news #srilanka #vairalvideo #vairal #malaiyagakuruvi #lka
02:55
Video thumbnail
மலையக மக்கள் இன்னும் ஏமார்ந்து கொண்டிருக்கின்றனர். I தேசிய மக்கள் சக்தியின் தெனியா மாநாடு I NPP
11:43
Video thumbnail
இலங்கை வந்த இளவரசிக்கு ஜனாதிபதி மாளிகையில் வரவேற்பு
02:16
Video thumbnail
நான் மருத்துவராக வேண்டும்! ஊடகங்களிடம் மனம் திறந்த கில்மிசா..
03:39
Video thumbnail
முத்து சப்பரத்தில் இசைக்குயில்....! மேளதாளத்துடன் கோலாகல வரவேற்பு..!!
03:05

Related Articles

Latest Articles