நுகேகொடையில் எதிர்வரும் 21 ஆம் திகதி நடைபெறவுள்ள கூட்டத்தில் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி பங்கேற்காது என்று அக்கட்சியின் சிரேஷ்ட உப தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் சுஜீவ சேனசிங்க தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போதே அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
எனினும், அரசாங்கத்தின் ஒடுக்குமுறை மற்றும் ஜனநாயக விரோத செயற்பாடுகளுக்கு எதிராக எதிரணிகளுடன் இணைந்து பயணிக்ககூடிய இடங்களில் ஐக்கிய மக்கள் சக்தி இணைந்து செயற்படும் எனவும் அவர் கூறினார்.
அரசாங்கத்தின் ஊழல், தவறான நிர்வாகம் மற்றும் ஜனநாயக விரோத நடைமுறைகளுக்கு எதிராகவே நவம்பர் 21 ஆம் திகதி நுகேகொடையில் பேரணியை நடத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்பன திட்டமிட்டுள்ளன.
