21/4 தாக்குதல் – சஹ்ரானுடன் தொடர்பை பேணியவர் தமிழகத்தில் கைது!

உயிர்த்த ஞாயிறு தினத்தன்று பயங்கரவாதத் தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹாசிமுடன் நெருங்கிய தொடர்புகளை பேணியதாக சந்தேகிக்கப்படும் ஒருவர் இந்தியாவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்திய தேசிய புலனாய்வு விசாரணை முகாமையினால் குறித்த நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பின் உறுப்பினர் என சந்தேகிக்கப்படும் ஷெயிக் ஹிதயதுல்லா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட நபர் கடந்த ஒக்டோபர் மாதம் தமிழகத்தில் இடம்பெற்ற கார் குண்டு வெடிப்புச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்களுடன் தொடர்புகளை பேணிய தகவல் வெளியாகியுள்ளது.

Related Articles

Latest Articles