இலங்கையில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் மற்றும் தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாடாளுமன்றத்தில் இரு நாட்கள் விவாதம் நடைபெறவுள்ளது.
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தலைமையில் இன்று நடைபெற்ற நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பான குழு கூட்டத்திலேயே இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி எதிர்வரும் 21 மற்றும் 22 ஆம் திகதிகளில் விவாதம் நடத்த நாள் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கான சபை ஒத்திவைப்புவேளை பிரேரணையை எதிரணி கொண்டுவரவுள்ளது.
