21/4 தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை இன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளது.
அமைச்சரவைக் கூட்டம் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறவுள்ளது. இதன்போதே ஜனாதிபதியால் சமர்ப்பிக்கப்படும் என தெரியவருகின்றது.
இக்குழுவானது தனது இறுதி விசாரணை அறிக்கையை அண்மையில் ஜனாதிபதியிடம் கையளித்தது. அதேவேளை, குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சிகள் வலியுறுத்திவருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.