22 வயது இளைஞன் தவறான முடிவெடுத்து உயிர் மாய்ப்பு! வட்டவளையில் சோகம்!!

வட்டவளை, கார்மென் தோட்டத்திலுள்ள குளமொன்றிலிருந்து 22 வயது இளைஞர் ஒருவரின் சடலம் நேற்று மாலை மீட்கப்பட்டுள்ளது.

கார்மென்ட் தோட்டத்தைச் சேர்ந்த
தோமஸ் செபஸ்டியன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

குறித்த இளைஞன் குளத்தில் பாய்வதை தான் கண்டதாக பிரதேசவாசியொருவர் தெரிவித்துள்ளார்.

இதனையடுத்து அவர் கூச்சலிட்டுள்ளார். பிரதேச மக்கள் வந்து தேடுதல் நடத்தினாலும் அவர் சடலமாகவே மீட்கப்பட்டுள்ளார்.

அவர் தவறான முடிவை எடுத்து உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் வட்டவளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

பொகவந்தலாவ நிருபர் – சதீஸ்

Related Articles

Latest Articles