22 விரைவில் சபையில் முன்வைப்பு!

அரசியலமைப்பிற்கான 22 ஆவது திருத்தச்சட்டமூலம் ஒரிரு நாட்களுக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும் என்று நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தெரிவித்தார்.

அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (28) நடைபெற்ற விசேட ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

” இறுதிப்படுத்தப்பட்ட 22 ஆவது திருத்தச்சட்டமூலத்துக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.  இது ஒரிரு நாட்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும். அதன் பின்னர் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு, தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்.

22 ஆவது திருத்தச்சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிய பின்னர், அது 21 ஆவது திருத்தச்சட்டமூலமாக ஏற்றுக்கொள்ளப்படும்.” என்றும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles