டெங்கு நோயினால் பாதிக்கப்பட்ட இளைஞன் ஒருவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், இன்று உயிரிழந்துள்ளார்.
யாழ்ப்பாணம் அச்சுவேலி தோப்பு பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில், அச்சுவேலி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில், மூளை சாவடைந்திருந்தார்.
தொடர்ந்து இளைஞனுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று புதன்கிழமை (27) காலை உயிரிழந்துள்ளார்.
அதேவேளை யாழ்.போதனா வைத்தியசாலையில், நேற்று செவ்வாய்க்கிழமை (26) மாத்திரம் 71 பேர் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளான நிலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.










