இலங்கையின் 7 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான கோட்டாபய ராஜபக்ச, எதிர்வரும் 24 ஆம் திகதி நாட்டிற்கு திரும்பவுள்ளார் என ரஷ்யாவிற்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க தெரிவித்துள்ளார்.
குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு இன்று வருகை தந்த வேளையில், அவர் இந்த தகவலை வெளியிட்டார்.
ஜுலை 09 ஆம் திகதி மக்கள் புரட்சி வெடித்ததால், ஜனாதிபதி மாளிகையில் இருந்து வெளியேறினார் கோட்டாபய ராஜபக்ச.
ஜுலை 12 ஆம் திகதிவரை தலைமறைவாகியிருந்த அவர், 13 ஆம் திகதி மாலைதீவு சென்றார். பின்னர் 14 ஆம் திகதி சிங்கப்பூர் நோக்கி பயணமானார். அங்கிருந்து பதவி விலகல் கடிதத்தை அனுப்பியிருந்தார்.
சிங்கப்பூரில் இருந்து அண்மையில் தாய்லாந்து நோக்கி புறப்பட்டார்.