24 மணித்தியாலயத்திற்கு மேலாக காய்ச்சல் இருக்குமாயின் உடனடியாக வைத்தியரை நாடுங்கள்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக, டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்று தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது.

டெங்கு நோயாளர்கள் பெருமளவில் மேல் மாகாணத்தில் காணப்படுவதாக டெங்கு நோய் ஒழிப்பு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் சுதத் சமரவீர கூறினார்.

மேலும், கொழும்பு மாநகரம் அடங்களாக ஏனைய பிரதேசங்களை உள்ளடக்கிய வகையில் 10 அனர்த்த வலையங்கள் உண்டு. எனவே காய்ச்சல் இருக்குமாயின், ஓய்வு எடுப்பது முக்கியமாகும்.

24 மணித்தியாலயத்திற்கு மேலாக காய்ச்சல் இருக்குமாயின் வைத்தியரை நாட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

Related Articles

Latest Articles