26 வயது இளைஞன் கத்தியால் குத்தி கொலை!

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட விநாயகபுரம் கிராமத்தில் 26 வயது இளைஞன் ஒருவர் கொலை செய்யப்பட்டுள்ளார்.

இன்று (01) அதிகாலை 4 மணியளவில் வீடு புகுந்த நபர்கள் 26 வயதுடைய தவக்குமார் சுரேஸ் என்ற இளைஞனை கத்தியால் குத்தி பலமாக தாக்கியுள்ளனர்.

சம்பவத்தில் படுகாயமடைந்த இளநாகன் அயலவர்கள் மற்றும் உறவினர்களால் மீட்கப்பட்டு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

இருப்பினும் வைத்தியசாலைக்கு செல்லும் மன்னரே வழியில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ள நிலையில் மேலதிக விசாரணைகள் இடம்பெறுவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

Related Articles

Latest Articles