கள்ளத் தொடர்பு: 26 வயது பெண்ணை குத்தி கொலை செய்த ஆசைநாயகன்

26 வயதுடைய பெண்ணொருவர் போத்தலால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ள கொடூர சம்பவமொன்று சீதுவ பகுதியில் நேற்று முன்தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த பெண்ணுடன் முறையற்ற தொடர்பை பேணிவந்த நபரே இந்த கொலையை செய்துள்ளார் எனவும், அவர் தற்போது குறித்த பகுதியை விட்டு தப்பிச்சென்றுள்ளார் எனவும் தெரியவருகின்றது.

இரு பிள்ளைகளின் தாயான குறித்த பெண் சீதுவ பகுதியில் வாடகை அறையொன்றில் தங்கியுள்ளார். முதலாவது கணவரிடம் இருந்து பிரிந்து வாழ்ந்துள்ளார்.

இந்நிலையில் 22 வயது இளைஞர் ஒருவருடன் இவர் கள்ள தொடர்பை ஏற்படுத்தி வந்துள்ளார்.

இருவருக்கும் இடையில் நேற்றிரவு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது . இதனையடுத்தே போத்தலால் குறித்த பெண்ணின் கழுத்து பகுதியில் குத்தி அவரை கொலை செய்துள்ளார்.

சந்தேக நபரை கைது செய்வதற்கான விசாரணை ஆரம்பமாகியுள்ளது.

Related Articles

Latest Articles