2,800 கர்ப்பிணி தாய்மாருக்கு கொரோனா – 21 பேர் பலி

கர்ப்பிணி தாய்மாருக்கு ஏதேனும் ஒரு கொரோனா தடுப்பூசியை ஏற்ற தீர்மானிக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சின் ஆலோசனைக் குழுவின் பரிந்துரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

Moderna, Pfizer, AstraZeneca தடுப்பூசிகளையும் கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஏற்ற முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணி தாய்மாருக்கு Sinopharm தடுப்பூசியை ஏற்றுவதற்கு மாத்திரமே இதற்கு முன்னர் பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.

இதேவேளை, COVID தொற்றுக்குள்ளான 21 கர்ப்பிணி தாய்மார்கள் இதுவரை உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

கொரோனா தொற்றுக்குள்ளான 700 கர்ப்பிணிகள் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக குடும்பநல சுகாதார பணியகத்தின் பணிப்பாளர் விசேட வைத்திய நிபுணர் சித்ரமாலி டி சில்வா தெரிவித்துள்ளார்.

நாட்டில் இதுவரை 2800 கர்ப்பிணி தாய்மார்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles