ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவு தெரிவித்து இடம்பெறவுள்ள கட்சி தாவல்கள் எதிர்வரும் 29 ஆம் திகதி முதல் ஆரம்பமாகும் என்று தெரியவருகின்றது.
புதிய கூட்டணியின் 2ஆவது மக்கள் கூட்டம் 29 ஆம் திகதி மொனறாகலை, வெல்லவாயவில் நடைபெறவுள்ளது.
இதன்போது எதிரணியில் உள்ள சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜனாதிபதிக்கு ஆதரவு தெரிவித்து மேடையேறவுள்ளனர்.
நிமல்லான்சா, அனுரபிரியதர்சன யாப்பா உள்ளிட்டவர்களின் பங்கேற்புடன், ஜனாதிபதி ரணிலுக்கு ஆதரவாக உருவாகியுள்ள ‘புதிய கூட்டணியில்’, சுதந்திரக்கட்சியின் நிமல் சிறிபாலடி சில்வா அணி, சுயாதீன எம்.பிக்கள் சிலர், தமிழ் பேசும் எம்.பிக்கள் சிலர் அங்கம் வகிக்கின்றனர்.
இந்நிலையிலேயே மொனறாகலை கூட்டத்தின்போது மேலும் சிலர் இணையவுள்ளனர். இதற்கான ஏற்பாடுகள் திரைமறைவில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன என்று தெரியவருகின்றது.