நாட்டில் மேலும் 3 ஆயிரத்து 223 பேருக்கு இன்று கொரோனா வைரஸ் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இதன்படி வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3 லட்சத்து 93 ஆயிரத்து 223 ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் முதன்முறையாக 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு நேற்று கொவிட் தொற்று உறுதிசெய்யப்பட்டது. எனவே, இன்று 2ஆவது நாளாகவும் தொற்றாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரத்தை தாண்டும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
