3ஆவது ஒருநாள் போட்டியில் ஆஸி.க்கு ஆறுதல் வெற்றி

தென்னாபிரிக்காவுக்கு எதிரான 3ஆவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 276 ஓட்டங்கள்வித்தியாசத்தில் ஆறுதல் வெற்றியைப் பெற்றது. தொடரை 2-1 என்ற கணக்கில் தென்னாபிரிக்க அணி கைப்பற்றியது.

தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி, அவுஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து ஒருநாள் கிரிக்கெட் தொடரில் விளையாடி வருகிறது. முதல் 2 போட்டிகளிலும் தென்னாபிரிக்க அணி வெற்றி பெற்று 2-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் இருந்தது.

இந்​நிலை​யில் இவ்​விரு அணி​களுக்கு இடையி​லான 3ஆவது மற்​றும் கடைசி ஒரு நாள் கிரிக்​கெட் போட்டி மெக்கே நகரில் நேற்று நடை​பெற்​றது.

முதலில் விளை​யாடிய அவுஸ்​திரேலிய அணி 50 ஓவர்​களில் 2 விக்​கெட் இழப்​புக்கு 431 ஓட்டங்கள் குவித்​தது. டிரா​விஸ் ஹெட் 103 பந்​துகளில் 142 ஓட்டங்களும், கேப்​டன் மிட்​செல் மார்ஷ் 106 பந்​துகளில் 100 ஓட்டங்களும், கேமரூன் கிரீன் 55 பந்​துகளில் 118 ஓட்டங்களும் குவித்​தனர். அலெக்ஸ் கேரி 37 பந்​துகளில் 50 ஓட்டங்கள் எடுத்​தார்.

இதையடுத்து 432 ஓட்டங்களை இலக்​காகக் கொண்டு விளை​யாடிய தென்னாப்​பிரிக்க அணி 24.5 ஓவர்​களில் 155 ஓட்டங்களுக்​குச் சுருண்​டது.

எய்​டன் மார்​கிரம் 2, ரியான் ரிக்​கெல்​டன் 11, கேப்​டன் தெம்பா பவுமா 19, டோனி டி ஜோர்ஸி 33, டிரிஸ்​டன் ஸ்டப்ஸ் 1, டெவால்ட் பிரே​விஸ் 49, வியான் முல்​டர் 5, கார்​பின் போஷ் 17, செனுரன் முத்​து​சாமி 9 ஓட்டங்கள் எடுத்​தனர்.

இதையடுத்து 276 ஓட்டங்கள் வித்​தி​யாசத்​தில் அபார வெற்​றியை அவுஸ்​திரேலிய அணி பெற்​றது. இந்​தத் தொடரில் அந்த அணிக்கு இது ஆறு​தல் வெற்​றி​யாக அமைந்​தது.

Related Articles

Latest Articles