ஹபரணையில் ரயிலில் மோதி மூன்று காட்டு யானைகள் உயிரிழந்துள்ளன என்று ரயில்வே கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது.
மட்டக்களப்பு – திருகோணமலை – கொழும்பு ரயில் பாதையில் ஹபரணை மற்றும் கல்ஓயா நிலையங்களுக்கு இடையில் ஹடரெஸ் கொடுவ பிரதேசத்துக்கு அருகில் அதிவேகமாகப் பயணித்த ரயிலில் மோதுண்டு மூன்று யானைகள் உயிரிழந்துள்ளன என்று ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இன்று அதிகாலை 5.05 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
விபத்தின் பின்னர் ரயில் தடம் புரண்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரயிலின் இயந்திரம் மற்றும் மற்றொரு பெட்டி தடம் புரண்டுள்ளன.
இதன் காரணமாக மட்டக்களப்பு – கொழும்பு ரயில் சேவைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்தன.
