3 நாட்கள் மக்கள் நடமாடத்தடை – வெளியானது புதிய அறிவிப்பு!

நாளை (13) இரவு 11 மணி முதல் எதிர்வரும் திங்கட்கிழமை (17) அதிகாலை 4 மணி வரை நாடு முழுவதும் அமுலாகும் வகையில் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது என்று இராணுவ தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எனினும், இக்காலப்பகுதியில் அத்தியாவசிய சேவைகளை தடையின்றி முன்னெடுக்கப்படும் எனவும், மேல் மாகாணத்தில் செலுத்தப்படும் தடுப்பூசி தொடர்ந்தும் நடைமுறைப்படுத்தப்படும் என அவர் குகூறினார்.

அதேவேளை, 17 ஆம் திகதி முதல் மே 31 ஆம் திகதிவரை தினமும் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரை பயணத்தடை அமுலில் இருக்கும்.

அத்துடன், கர்ப்பிணி பெண்கள் மற்றும் நோயாளிகள் அவசர தேவை நிமித்தம் வைத்தியசாலைகளுக்கு செல்லமுடியும். அதற்கு தடை பொருந்தாது.

Related Articles

Latest Articles