3 வாரங்களுக்கு பிறகு நாளை திறக்கப்படுகிறது நோர்வூட் த.ம.வி.!

கொரோனா வைரஸ் பரவலைக்கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த 3 வாரங்களாக மூடப்பட்டிருந்த நோர்வூட்  தமிழ் மகா வித்தியாலயம் நாளை (21) முதல் மீண்டும் கற்றல் நடவடிக்கைக்காக திறக்கப்படவுள்ளது என்று மஸ்கெலியா சுகாதார அத்தியட்சகர் பிரிவின் மேற்பார்வை அதிகாரி பி.ஏ.பாஸ்கரன் தெரிவித்தார்.

” இப்பாடசாலையில் பணிபுரிந்த ஆசிரியை ஒருவருக்கு வைரஸ் தொற்றியிருந்தது. இதனையடுத்து அவருடன் தொடர்பில் இருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பிசிஆர் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன. தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் தனிமைப்படுத்தல் நிலையங்களுக்கு கொண்டுசெல்லப்பட்டனர்.

அத்துடன், தனிமைப்படுத்தப்பட்டிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் இரண்டு தடவைகள் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அவர்களுக்கு வைரஸ் தொற்று இல்லை என்பது உறுதியானது.

வகுப்பறைகள், காரியாலயம், பாடசாலை சுற்று வட்டங்களுக்கு இன்று பாடசாலை நிர்வாகம் மூலம் தொற்று நீக்கி தெளிக்கப்படவுள்ளது.  அதனை தொடர்ந்து நாளை 21 ஆம் திகதி முதல் கற்றல் நடவடிக்கை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” – எனவும் அவர் கூறினார்.

மஸ்கெலியா நிருபர் பெருமாள் –

 

Related Articles

Latest Articles