ஐ.சி.சி. டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் நியூசிலாந்து அணியுடன் மோதும் அணி எது என்பது இங்கிலாந்து – இங்கிலாந்து தொடரின் முடிவின் அடிப்படையில் அமைய இருக்கிறது.
சர்வதேச கிரிக்கெட் சபை ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் என்பதை கடந்த 2019 இல் அறிமுகம்படுத்தியது.
2019 முதல் 2021 மார்ச் மாதம் வரை நடைபெறும் டெஸ்ட் போட்டிகள் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் இறுதிப் போட்டியில் பலப்பரீட்சை நடத்தும். இறுதி போட்டி ஜுன் மாதம் இங்கிலாந்து லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெறும்.
தற்போது முதல் இடத்தில் நியூசிலாந்து அணியும், இந்தியா 2-வது இடத்திலும், ஆஸ்திரேலியா 3-வது இடத்திலும், இங்கிலாந்து 4-வது இடத்திலும் உள்ளன.
இந்தியா – இங்கிலாந்து (4 டெஸ்ட்), தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா (3 டெஸ்ட்) இடையிலான டெஸ்ட் தொடரின் முடிவைப் பொறுத்து முதல் இரண்டு இடங்கள் பிடிக்கும் அணி எவைகள் என்பது முடிவாகும் நிலை இருந்தது.
இன்று தென்ஆப்பிரிக்கா – ஆஸ்திரேலியா இடையிலான தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் நியூசிலாந்து அணி இதிதிப் போட்டிக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது.
இந்தியா – இங்கிலாந்து தொடரின் முடிவைப் பொறுத்து இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா அணிகளில் ஒன்று நியூசிலாந்துடன் இறுதிப் போட்டியில் மோதும் நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியா இங்கிலாந்துக்கு எதிராக 2-0, 2-1, 3-0, 3-1, 4-0 என தொடரை வென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இங்கிலாந்து 3-0, 3-1, 4-0 என தொடரை வென்றால் இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
1-0 என இந்தியா வெற்றி பெற்றாலும், 1-0, 2-0, 2-1 என இங்கிலாந்து வெற்றி பெற்றாலும், 0-0, 1-1, 2-2 என தொடர் டிரா ஆனாலும் ஆஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
இதனால் இந்தியா – இங்கிலாந்து இடையிலான ஒவ்வொரு போட்டியும் முக்கியத்தும் வாய்ந்ததாக இருக்கும்.