நாட்டில் தற்போது அமுலில் உள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் எதிர்வரும் 30 ஆம் திகதிக்கு பின்னரும் நீடிக்கப்படுமா என்பது தொடர்பில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை தீர்மானம் எடுக்கப்படும் என சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் இன்று தெரிவித்தார்.
கொரோனா ஒழிப்பு செயலணி எதிர்வரும் வெள்ளிக்கிழமை கூடவுள்ளது. இதன்போதே நிலைமை மீளாய்வு செய்யப்பட்டு தீர்மானம் அறிவிக்கப்படும் எனவும் அவர் கூறினார்.
நாட்டில் 10 நாட்களுக்கு பிறப்பிக்கப்பட்டுள்ள தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவை மேலும் ஒரு வாரத்துக்கு நீடிக்குமாறு பல தரப்பினரும் கோரிக்கை விடுத்துவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.










