போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க பதவி விலக வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி வலியுறுத்தியுள்ளது.
மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் கருத்து வெளியிட்ட முன்னாள் இராஜாங்க அமைச்சர் இந்திக்க அனுருத்த கூறியவை வருமாறு,
” துறைமுகத்தில் இருந்து பரிசோதனையின்றி 323 கொள்கலன்கள் விடுவிக்கப்பட்டுள்ளன. அவற்றில் ஆயுதங்களே வந்தன என்று நாடாளுமன்ற உறுப்பினர் தகவல் வெளியிட்டுள்ளார். இது தொடர்பில் எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன?
கொள்கலன் விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு குழுவொன்று நியமிக்கப்பட்டது.
விசாரணையின்றி அவை விடுவிக்கப்பட்டமை தவறு என அந்த குழு கண்டறிந்துள்ளது. நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
323 கொள்கலன்களில் என்ன இருந்தன என்பதை துறைக்கு பொறுப்பான அமைச்சர் வெளிப்படுத்த வேண்டும்.
அதுமட்டுமல்ல அமைச்சர் பிமல் ரத்நாயக்க அல்லது பிரதி அமைச்சர் பதவி விலக வேண்டும்.” – என்றார்.