350 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு

சிறு குற்றங்களுக்காக சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட 350 கைதிகளுக்கு விசேட பொதுமன்னிப்பு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

நாளை(12) அனுஷ்டிக்கப்படவுள்ள தேசிய சிறைக்கைதிகள் தினத்தை முன்னிட்டு இவ்வாறு பொதுமன்னிப்பு வழங்கப்படவுள்ளது.

அரசியலமைப்பின் 34ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைவாக ஜனாதிபதியால் விசேட பொதுமன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles