36,000 மெட்ரிக் டன் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று இலங்கைக்கு

36,000 மெட்ரிக் டன் பெற்றோல் ஏற்றிய கப்பல் இன்று (18) நாட்டை வந்தடையவுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை முனையங்கள் நிறுவனத்தின் தலைவர் மொஹமட் உவைஸ் தெரிவித்துள்ளார்.

இந்தக் கப்பல் இன்றிரவு 8 மணியளவில் நாட்டை வந்தடையவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேநேரம், 40,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிய கப்பல் நேற்றிரவு நாட்டை வந்தடைந்துள்ளது.

அதற்கமைய, குறித்த டீசல் தொகை கடன் அடிப்படையில் கொண்டு வரப்பட்டுள்ளதாக இலங்கை பெற்றோலிய களஞ்சியசாலை முனையங்கள் நிறுவனத்தின் சிரேஷ்ட பேச்சாளர் ஒருவர்  தெரிவித்தார்.

இந்நிலையில், நாட்டில் போதுமான அளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதாகவும் எந்தவித எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், 40,000 மெட்ரிக் டன் டீசல் ஏற்றிய கப்பல் ஒன்று நாளைய தினம் நாட்டை வந்தடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles