4ஆவது நாடாளுமன்ற ஊடகவியலாளருக்கும் கொரோனா!

பாராளுமன்ற ஊடக அறிக்கையிடல் கடமையில் ஈடுபடும் மேலும் ஒரு ஊடகவியலாளருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஒக்டோபர் 29 ஆம் திகதி, ஆங்கில வார இதழொன்றில் கடமையாற்றும் ஊடகவியலாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அதன்பின்னர் சிங்கள தேசிய நாளிதழொன்றின் ஊடகவியலாளர் இருவருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையிலேயே நான்காவது ஊடகவியலாளர் ஒருவருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.
கடந்த ஒக்டோபர் 21, 22ஆம் திகதி, இடம்பெற்ற 20ஆவது திருத்தம் தொடர்பான விவாதத்தில் ஊடக அறிக்கையிடல் கடமையில் ஈடுபட்டிருந்தவர்களை சுய தனிமைப்படுத்தலில் இருக்குமாறு, சுகாதாரப் பிரிவு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related Articles

Latest Articles