ரன்பீர் கபூர் மற்றும் யாஷ் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ராமாயணம்: பாகம் 1’ திரைப்படம், வெளியான முதல் ஐந்து நாட்களிலேயே உலகளாவிய ரீதியில் இந்திய மதிப்பில் சுமார் 663.9 கோடி ரூபாவை வசூலித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்தியாவில் மட்டும் இப்படம் இதுவரை 346.35 கோடி ரூபாவை நிகர வசூலாகப் பெற்றுள்ளது.
குறிப்பாக, வெளியான ஐந்தாவது நாளான திங்கட்கிழமை மாத்திரம் 107.5 கோடி ரூபாவை வசூலித்துள்ளது. இது ஞாயிற்றுக்கிழமை வசூலுடன் ஒப்பிடுகையில் சுமார் 91.5 சதவீத அதிகரிப்பாகும்.
இதன்மூலம், இந்தியத் திரைப்படங்களின் வரலாற்றில் முதல் திங்கட்கிழமையில் அதிக வசூலைப் பெற்ற திரைப்படம் என்ற புதிய சாதனையை ‘ராமாயணம்: பாகம் 1’ படைத்துள்ளதாகத் திரைப்பட வர்த்தகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதற்கு முன்னர் இந்தச் சாதனையை ‘பாகுபலி 2’ திரைப்படம் தக்கவைத்திருந்ததாகக் குறிப்பிடப்படுகிறது.
எனினும், இந்த வசூல் விபரங்கள் திரைப்பட வர்த்தகத் துறையின் ஆரம்பகட்ட மதிப்பீடுகளாகும். வெவ்வேறு வசூல் கண்காணிப்பு நிறுவனங்களின் கணக்கீடுகளுக்கு அமைய இறுதித் தொகையில் மாற்றங்கள் ஏற்படலாம்.










