5 மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை!

மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மாவட்டங்களிலும் இன்று(20) 50 மில்லிமீட்டர் வரையிலான மழைவீழ்ச்சி பதிவாகலாமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மாலை அல்லது இரவு வேளையில் இடைகிகடையே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

இதனிடையே, தொடர்ச்சியாக நிலவிவரும் மழையுடனான வானிலையினால் காலி, களுத்துறை, கேகாலை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles