50 நாட்களுக்கு பிறகு மாகாண போக்குவரத்து ஆரம்பம்!

50 நாட்களுக்கு பின்னர் மாகாணங்களுக்கிடையிலான போக்குவரத்து இன்று ஆரம்பமானது. கடும் சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றியே குறித்த சேவையை முன்னெடுப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ஆசனங்களின் எண்ணிக்கைக்கு அதிகமாக பயணிகளை ஏற்றுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவலையடுத்து மாகாணங்களுக்கிடையிலான பயணத்தடை கடந்த மே 11 ஆம் திகதி முதல் அமுலுக்கு வந்தது. அதன்பின்னர் நேற்று நள்ளிரவுவரை குறித்த தடை நீடித்தது.

மாகாணங்களுக்கிடையில் பயணிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், சுகாதார வழிகாட்டல்களையும், நடைமுறைகளையும் முறையாக பின்பற்றுமாறு சுகாதார மற்றும் போக்குவரத்து அமைச்சுகள், மக்களிடமும், பயணிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளன.

ரயில் சேவையும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. மலையக பகுதிகளில் இருந்து இன்று கொழும்புக்கு பஸ்கள் சேவையில் ஈடுபட்டன.

கே. சுந்தரலிங்கம், ஹட்டன்

Paid Ad
Previous articleஹிஷாலினியின் மரணத்துக்கு நீதி கோரி ஹோப் தோட்டத்தில் போராட்டம்
Next article7 நாட்களுக்குள் 380 விபத்துகள்! 51 பேர் உயிரிழப்பு!!