நல்லாட்சி அரசாங்க காலப்பகுதியில் தோட்ட தொழிலாளர்களுக்கு 50ரூபாயினை பெற்றுக்கொடுக்க வக்கில்லாதவர்கள் பெருந்தோட்ட தொழிலாளர்களை எப்படி சிறுதோட்ட உரிமையாளர்கலாக மாற்றுவார்கள் என இலங்கை தொழிலாளர் காங்ரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸால் பொகவந்தலாவையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரச்சார கூட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு கேள்வி எழுப்பினார்.
இதன்போது அமைச்சர் ஜீவன் மேலும் கூறியவை வருமாறு,
“ எதிர்கட்சி தலைவர் கொத்மலை பகுதியில் வைத்து தோட்ட தொழிலாளர்களுக்கு 2500 ரூபா சம்பளத்தை பெற்று தருவதாக எதற்கு கூறினார் ? எதிர்கட்சி தலைவரை வழிநடத்தும் முறை தவறாக காணப்படுகின்றது. அதற்கு அவரை குற்றம் சொல்லி பயன் இல்லை. அவருடன் இருப்பவர்கள் அப்படிபட்டவர்கள்தான்.
இதொகா அரசாங்கத்தோடு இருந்தமையால்தான் தோட்ட தொழிலாளர்களுக்கு 1350 ரூபா பெற்றுக்கொடுக்க முடிந்தது. அன்று நாங்கள் அரசாங்கத்தில் இருக்கவில்லை. ஆனால் அரசாங்கத்தோடு இருந்தவர்களுக்கு 50ரூபாயினை பெற்றுக்கொடுக்க முடியவில்லை.
1700 ரூபா சம்பளம் மெற்றுதருவதாக கூறி இன்று 1350 ரூபாவே பெற்றுக்கொடுத்துள்ளதாக விமர்சனத்தை முன்வைக்கின்றார்கள். ஆரம்பத்தில் 1350 ரூபா அடிப்படை சம்பளம் என முன் கூட்டியே நாங்கள் அறிவித்திருந்தோம். எந்த இடத்திலும் அடிப்படை சம்பளம் 1700 ரூபா என அறிவிக்கவில்லை. ஆனால் ஊக்கிவிப்பு கொடுப்பணவு 350ரூபாவை கட்டாயம் நாங்கள் பெற்றுக்கொடுப்போம்.” – என்றார்.