500 வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றம்!

அரசின் அடாவடித்தனமான வரி விதிப்பால் சுமார் 500 வைத்தியர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர் என்று தேசிய மக்கள் சக்தியின் செயலாளரான வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஒரு லட்சம் ரூபாவுக்கு மேல் சம்பளம் பெறுபவர்களிடமிருந்து 6 சதவீதம் முதல் 36 சதவீதம் வரை வரி அறவிடப்படுகின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

“ வைத்தியர்கள் உட்பட ஏனைய தொழில்சார் வல்லுநர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதால் எதிர்காலத்தில் பாரிய சிக்கல் உருவாகும். வைத்தியர்கள் நாட்டுக்கு சேவை செய்யக்கூடிய சிறந்த திறமை படைத்தவர்கள். எனினும், இன்றளவில் சுமார் 500க்கும் அதிகமான வைத்தியர்கள் நாட்டை விட்டுச் சென்றுள்ளனர். வைத்தியத் துறையில் தொழில்நுட்பத் துறையில் பணியாற்றுபவர்களும் நாட்டை விட்டு செல்ல முயற்சி மேற்கொண்டுள்ளனர்.” – எனவும் வைத்திய நிபுணர் நிஹால் அபேசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Related Articles

Latest Articles