500 விக்கெட்டுகள்: சாதனை படைத்தார் அஸ்வின்!

டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகளை வீழ்த்திய 2ஆவது இந்திய வீரராக அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.

இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது.

இதில் நடைபெற்ற முதல் 2 போட்டிகளின் முடிவில் இரு அணிகளும் தலா 1 வெற்றி பெற்றுள்ளன.
இதனையடுத்து இவ்விரு அணிகளுக்கு இடையேயான 3-வது டெஸ்ட் போட்டி நேற்று தொடங்கியது. இதில் நாணயச்சுழற்சியில் வென்ற இந்தியா முதலில் துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது.

இந்திய அணி முதல் இன்னிங்சில் 445 ஓட்டங்களைப் பெற்றது. இந்திய அணியில் அதிகபட்சமாக ரோஹிpத் சர்மா 131 ஓட்டங்களையும், ஜடேஜா 112 ஓட்டங்களையும் பெற்றனர்.

இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்சை தொடங்கியது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக ஜாக் கிராலி மற்றும் பென் டக்கெட் ஆகியோர் களமிறங்கினர். இதில் ஜாக் கிராலியின் விக்கெட்டை அஸ்வின் வீழ்த்தினார். இது டெஸ்ட் போட்டிகளில் அவரது 500-வது விக்கெட்டாக பதிவானது. இதன் மூலம் அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் 500 விக்கெட்டுகள் வீழ்த்தியவர்கள் பட்டியலில் இணைந்துள்ளார்.

இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி உள்ள அஸ்வின் மொத்தம் 500 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். மேலும் இந்தியா தரப்பில் 500 விக்கெட்டுகள் வீழ்த்திய 2 வது பவுலர் என்ற வரலாறு படைத்துள்ளார்.

முத்தையா முரளிதரன் – 800 விக்கெட்டுகள்
சேன் வார்னே – 708 விக்கெட்டுகள்
ஜேம்ஸ் ஆண்டர்சன் – 690 விக்கெட்டுகள்
அனில் கும்ப்ளே – 619 விக்கெட்டுகள்
ஸ்டூவர் பிராட்- 604 விக்கெட்டுகள்
க்ளென் மெக்ராத் – 563 விக்கெட்டுகள்
கோர்ட்னி வால்ஷ் – 519 விக்கெட்டுகள்
நாதன் லயன் – 517 விக்கெட்டுகள்
அஸ்வின் – 500 விக்கெட்டுகள்

 

Related Articles

Latest Articles