55 வயதுக்கு மேற்பட்டோருக்கு சுவாசிப்பதில் சிரமம் போன்ற கொரோனா வைரஸ் தொற்று அறிகுறிகள் காணப்படுமாயின், உடனடியாக வைத்தியசாலையில் அனுமதிக்குமாறு கொவிட் – 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் தலைவர், இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்தார்.
அவ்வாறில்லையெனின் உடனடியாக வைத்திய ஆலோசனையை பெற்றுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தினார்.










