போகாஹகும்புர ஒஹிய பகுதியில் விகாரை வளாகத்தில் பயிரிடப்பட்டிருந்த 571 கஞ்சா செடிகள் மீட்டுள்ளதாக போகாஹகும்புர பொலிஸார் தெரிவித்தனர்.
அத்துடன், பிக்கு ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
போகஹகும்பர பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த விகாரை பகுதியில் மேற்கொண்ட தேடுதலின் போது 6 அடி உயரமான கஞ்சா செடிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சந்தேக நபரை வெளிமடை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக போகஹகும்பர பொலிஸார் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை போகஹகும்பர பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
ராமு தனராஜா
