சுமார் 06 கோடி ரூபா பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளை கடத்தினார் எனக் கூறப்படும் 25 வயது இளைஞர் ஒருவர் மாளிகாவத்தை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அத்துடன், குறித்த நபரிடமிருந்து 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணமும், ஹெரோயினும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஹெரோயின் போதைப்பொருளை கொழும்பு, கிராண்ட்பாஸ் பகுதிக்கு எடுத்து செல்கையிலேயே அவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் வெல்லம்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 25 வயதுடைய இளைஞர் என்பதுடன், டுபாயில் தற்போது தலைமறைவாகியுள்ள ‘கெசல்வத்த தினுக” என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல் தலைவரின் உதவியாளர் எனத் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று (11) மாளிகாகந்த 2ஆம் இலக்க நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.