ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளுக்கு அமைய தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்றுக்கொண்ட மாணவர்கள் தொடர்பான விவரங்கள்
வெளியாகியுள்ளன.
இதற்கமைய, தேசிய ரீதியில் கணிதப் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியின் பானுல பெரேரா முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அதேநேரம், உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் தேசிய ரீதியில் மாத்தறை சுஜாதா வித்தியாலய மாணவி பிரமுதி பாஷனி முனசிங்க முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
அத்துடன், தேசிய ரீதியில் வணிகப் பிரிவில் கொழும்பு ஸ்ரீமாவோ பண்டார நாயக்க வித்தியாலயத்தின் கவ்தினி தில்சரனி முதலிடத்தைப் பெற்றுள்ளார்.
2022 (2023) ஆம் ஆண்டுக்கான ஜி.சீ.ஈ. உயர்தரப் பரீட்சைக்கு 2 இலட் சத்து 63 ஆயிரத்து 933 பேர் தோற்றி யிருந்தனர். அவர்களில், ஒரு இலட்சத்து 66 ஆயிரத்து 938 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அத்துடன், 59 பாடசாலை பரீட்சார்த்திகளினதும், 25 தனியார் பரீட்சார்த்திகளினதும் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன என்று பரீட்சைகள்
திணைக்களம் தெரிவித்துள்ளது.










