67 நாட்களில் 1,116 பில்லியன் ரூபா நஷ்டம்

நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளுக்காக ரயில் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்த நிலையில் கடந்த 67 நாட்களில் ரயில்வே திணைக்களத்திற்கு 1,116 மில்லியன் ரூபா நட்டம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் தம்மிக்க ஜயசுந்தர தெரிவித்துள்ளார்.

வழமையாக ஒரு நாளில் ரயில்வே திணைக்களத்திற்கு 16 மில்லியன்ரூபா வருமானம் கிடைக்கும் நிலையில் ஒரு மாதத்திற்கான வருமானம் 500 மில்லியனைத் தாண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தல் நடவடிக்கைகளுக்காக கடந்த 67 தினங்களாக தற்காலிகமாக ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டிருந்த நிலையில் ரயில்வே திணைக்களத்திற்கு அதனால் பெருமளவு வருமானம் இழக்கப்பட்டுள்ளது.

Related Articles

Latest Articles