69 ஆயிரம் பேர் யாழில் பாதிப்பு

சீரற்ற காலநிலை காரணமாக யாழ்ப்பாணம் மாவட்டத்தில் 20 ஆயிரத்து 732 குடும்பங்களைச் சேர்ந்த 69 ஆயிரத்து 384 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு அறிவித்துள்ளது.

அதேவேளை, அனர்த்தங்களால் 4 வீடுகள் முற்றாகச் சேதமடைந்துள்ளதுடன் 178 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.

மேலும் 79 பாதுகாப்பு நிலையங்களில் 2 ஆயிரத்து 136 குடும்பங்களைச் சேர்ந்த 7 ஆயிரத்து 342 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்றும் மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவு தெரிவித்துள்ளது.

Related Articles

Latest Articles