7 ஆம் திகதி பட்ஜட் முன்வைப்பு: சஜித் அணி கூறுவது என்ன?

சர்வதேச நாணய நிதியத்தை திருப்திப்படுத்தக்கூடிய வரவு- செலவுத் திட்டத்தையே அரசாங்கம் முன்வைக்கக்கூடும் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி சுட்டிக்காட்டியுள்ளது.

தேசிய மக்கள் சக்தியின் 2ஆவது வரவு- செலவுத் திட்டம் எதிர்வரும் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ள நிலையிலேயே ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் மேற்கண்டவாறு சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது இது தொடர்பில் மரிக்கார் மேலும் கூறியவை வருமாறு,

” மாகாணசபைத் தேர்தலை இலக்கு வைத்து வரி குறைப்பு செய்வதற்கு முன்னதாக அரசாங்கம் திட்டமிட்டிருந்தது. எனினும், கூட்டுறவு தேர்தல்களில் தோல்வி ஏற்படுவதால் மாகாணசபைத் தேர்தலை நடத்துவதற்கு அரசாங்கம் அஞ்சுகின்றது.

எனவே, சர்வதேச நாணய நிதியத்தை திருப்தி படுத்தும் பாதீடே முன்வைக்கப்படக்கூடும். அதேவேளை, மாகாணசபைத் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுக்கின்றோம்.” – என்றார் எஸ்.எம். மரிக்கார்.

Related Articles

Latest Articles