7 நாட்களுக்குள் 380 விபத்துகள்! 51 பேர் உயிரிழப்பு!!

நாட்டில் கடந்த ஜூலை 24 முதல் 30 வரையான காலப் பகுதியில் வீதி விபத்துக்கள் காரணமாக 51 உயிரிழப்புகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த காலக் கட்டத்தில் மொத்தம் 380 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதாகவும், அதனால் 260 பேர் காயமடைந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

வீதி விபத்துக்களால் நேற்றைய தினம் மாத்திரம் ஒன்பது உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.

Paid Ad
Previous article50 நாட்களுக்கு பிறகு மாகாண போக்குவரத்து ஆரம்பம்!
Next articleஉண்மையை கண்டறிந்து நீதியை நிலைநாட்ட சமூகத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல்கள்