கனடியத் தமிழ் பேரவை ஆண்டுதோறும் தமிழ் கனடியர்களின் நிதியுதவியின் ஊடாக பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு நன்கொடைகளை வழங்கி வருகின்றன.
இந்நிலையில் இலங்கையில் தற்போது நிலவிவரும் மோசமான பொருளாதார நெருக்கடியினைக் கருத்தில் கொண்டு வடக்கு, கிழக்கு, மத்திய மற்றும் தெற்கு ஆகிய நான்கு பிராந்தியங்களில் உள்ள ஆறு மருத்துவமனைகளுக்கு சுமார் 7 மில்லியன் பெறுமதியான மருத்துவப் பொருட்களை கனடியத் தமிழ் பேரவை வழங்கியுள்ளது