700 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

விசேட அதிரடிப்படையினரால் 35 லட்சம் பெறுமதியான போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. 700 ஐயாயிரம் ரூபா போலி நாணயத்தாள்கள் இதில் அடங்கியுள்ளன.

சம்பவம் தொடர்பில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், வாள் ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. சந்தேகநபர் புதுக்குடியிருப்பு பிரதேசத்தைச் சேர்ந்தவர். முல்லைத்தீவு முகாம் கட்டளைத் தளபதி பொலிஸ் பரிசோதகர் பி.எச்.டி.சி.குமாரசிங்க உள்ளிட்ட குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது பணம் அச்சிடப் பயன்படுத்தப்பட்ட கணினி உள்ளிட்ட உபகரணங்களும் கைப்பற்ற்பட்டன.

Related Articles

Latest Articles