TEA பாடல் வெளியீடு

படைப்பு என்கிற போது மக்களின் புத்தி கூர்மையிலிருந்து எழ.அது பல்வேறு கலை வெளிப்பாடுகள் அழகியல் மற்றும் வெளிப்பாட்டு நோக்கங்களுக்காக படைப்புகளின் முடிவிலியை உருவாக்கவும் கடத்தவும் மனிதனுக்கு உதவுகின்றன ஆனால் இந்த TEA பாடலின் வழியே சில நிமிடங்கள் சென்றாலும் அப்பனின் சிதைவு மேல் வாழ்ந்து கொண்டிருக்கும் நம்மை சுற்றி சுழல்கின்ற வஞ்சனை செயல்பாடுகளுக்கு எதிராக,நேரடியாகப் பரிவர்த்தனை செய்யும் வகையில் மக்களுக்கு ஆழமாக உணர்த்த வேண்டிய கருத்துக்களையும் நமது தீவிரமான வாழ்க்கை மதிப்புகளையும்,நமது கலாச்சார மதிப்புகளையும்,போலி அரசியல் நிலைப்பாடுகளையும் உருவாக்கக்கூடிய, உருவாக்கிய சோதனைகளை இங்கே ஒரு காணொளியின் வழியாக மக்களுக்கு உணர்த்துகிறது. கொடுக்கும் முயற்சிகளாக வெளிவந்து இருக்கிறது இந்த TEA (சொல்லப்படாத கதை) பாடல்.

 இந்திய நாட்டிற்கு தொழிலுக்காக அழைத்துவரப்பட்ட கூலி தொழிலாளராக அமர்ந்து அடிமைகளாக திட்டமிட்டு ஒரு வாழ்வை வாழ வைத்து அதன் வழியாக 200 வருடங்கள் எட்டியுள்ள மலையக தமிழர்களே தங்களின் வலியை உணர்ந்து நமது தேவையை நாமே தீர்மானிக்க வேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்கும் விதத்தில் இந்த TEA காணொளியை உருவாக்கியுள்ளார்கள்.நமக்கான தேவை இங்கே எப்போது? எப்படி? யாரால்? எந்த வடிவத்தினால் தீர்மானிக்கப்படவேண்டும் என்பதை ஆழமாக சொல்லிச்சென்றுள்ளனர்.சமூக அரசியல் காரணங்களாலும் தமது சொந்த அனுபவத்தின் வழியே தாம் தினம் தினம் அனுபத்திகொண்டிருக்கும் பெரும் வலியை போராட்டம், புரட்சியின் மனநிலையை உருவாக்கி, கலகத்தன்மையை இங்கு உருவாக்க வேண்டும் என்று எண்ணிக்கொள்ளலாம்.

 சமுக சார் செயற்பாடு என்பது வெறும் வார்த்தை அல்ல அது உள்ளமும் உடலும் ஒத்துழைப்பதோடு மட்டுமல்லாது அந்த சூழலோடு அனுதினமும் வாழ்வது.அந்த வகையில் இங்கு உடலாலும் உள்ளத்தாலும் வாழ்ந்து கொண்டும்.அந்த சமுகத்தின் மாற்றத்திற்கு ஏதாவது தன்னால் ஆன விதையை விதைக்க முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பது இளைஞர்களுக்கு உணர்த்தும் வகையில் “TEA” காட்சிகள் காணொளிகளாகக் காணப்படுகின்றன.

 மனித வாழ்க்கையிலுள்ள அபத்தங்களை வெளிப்படுத்துதல், சமகாலப் பிரச்சினைகளை அலசுதல், மற்றும் ஆராய்தல். அரசியல் சமுதாயச் சீர்கேடுகளை எடுத்துக்காட்டுதல், தனிமனித உரிமைக்குக் குரல்கொடுத்தல்,பழைய புராண நிகழ்வுகளில் சமகாலப் பிரச்சினையைக் காணுதல், இன்றைய வாழ்வின் துன்பச் சிக்கல்கள் முதலானவற்றைப் புலப்படுத்துதல் என்பன இந்த ராப் பாடலின் அங்கமாக இருந்தாலும் அது மலையக சமூகத்தின் அவலங்களாக அடிப்படைகளாக உள்ளன. ஒரு சில சந்தர்ப்பங்களில் குறியீடுகளாலும் உருவகமாகவும் தான் கூற வந்த கருத்துக்களை தெளிவாக புலப்படுத்தியுள்ளார்.

 தமிழன் நிறுவனத்தின் தயாரிப்பில் இசை, கதை , இயக்கம் – Cv laksh அவர்களினாலும்,ராப் – Cv laksh, அருண்பிரகாஸ் எந்தோனி,அஞ்சலினா ஆகியோர் பாடதுணை இயக்குநராக ஜீவனும், கலை இயக்குநராக கணேந்திரன் முக்கிய பாத்திரங்களாக பணியாற்றினார் ரா.நவீன்,.ஹரி.கமலி ,துஷா,.தினேஷ்,சிவகாந்த மற்றும் நண்பர்கள்TEA என்னும் பெயர் சொல்லும் தமிழன் தயாரிப்பு நிறுவனத்தின் யூடிப் பக்கத்தில் வெளிவந்துள்ள அனைவரும் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளனர்.

Related Articles

Latest Articles