75 வீத மின்கட்டண உயர்வு பெரும் அநீதி!

மின்சார சபைக்கு நஷ்டம் என்று கூறி 75 சதவீதம் மின்சார கட்டணத்தை அதிகரிப்பது  அநியாயமானது எனவும், எனவே , இந்த முடிவு உடனடியாக மீளப்பெறப்பட வேண்டும் எனவும் தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர் ரஞ்சன் ஜயலால் தெரிவித்துள்ளார்.

இலங்கை மின்சார சபையில் கடந்த காலங்களில்  அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொண்ட நிதி முறைகேடுகள், விலைமனுகோரல் நடைமுறை மீறல்கள் போன்றவற்றால்தான் அச்சபை நஷ்டத்தில் இயங்குகின்றது.

இந்நிலையில் அதன் சுமையை மக்கள் மீது திணிக்க இடமளிக்கக்கூடாது எனவும் அவர் வலியுறுத்தினார்.

அதேவேளை, மின் கட்டண உயர்வுக்கு மேலும் சில தரப்பினரும் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

Related Articles

Latest Articles