பலாங்கொடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொரவல ஆற்றில் 78 வயதுடைய பெண் ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கொலை செய்த குற்றச்சாட்டில் 17 வயது பாடசாலை மாணவன் ஒருவரை இன்று கைது செய்துள்ளதாக பலாங்கொடை பொலிஸார் தெரிவித்தனர்.
பலாங்கொடை முகுனுமலை பிரதேசத்தைச் சேர்ந்த பாடசாலை மாணவன் ஒருவனே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறினார்கள்.
பலாங்கொடை முகுனுமலை பிரதேசத்தைச் சேர்ந்த பெண்ணொருவர் கடந்த 27ஆம் திகதி தொரவல ஆற்றில் நீராட சென்ற சந்தர்பத்தில் குறித்த ஆற்றில் இருந்து சடலமாக மீட்க்கப்பட்டார்.குறித்த பெண்ணின் பிரதே பரிசோதனை பலாங்கொடை வைத்திய சாலையில் மேற்கொள்ளப்பட்டது.
குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக வைத்தியர்களுக்கு சந்தேகம் இருப்பதாகவும் இந்த விடயம் குறித்து காவல் துறையினரிடம் தெரிவித்தனர்.
இதனை அடுத்து குறித்த பெண்ணின் மரணம் தொடர்பாக சந்தேகம் இருப்பதாக பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்றத்திற்கு தெரியப்படுத்தினர்.
இதனை அடுத்து பலாங்கொடை மேலதிக நீதிவான் நீதிமன்ற நீதிபதி
பாக்யா தில்ருக்ஷி விக்ரமசிங்க விஷேட சட்ட வைத்தியரிடம்
மீண்டும் குறித்த பெண்ணின் பிரதே பரிசோதனை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார்.
விஷேட சட்ட வைத்தியர் ரத்நாயக்க தலைமையில் நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில் குறித்த பெண் பல தடவை பாலியல் துஷ்பிரயோகம் செய்து கழுத்து நெறிக்கபட்டு மூச்சி திணறிய நிலையில்உயிழந்துள்ளதாக கண்டறியபட்டது.
இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேக நபர் 17 வயது பாடசாலை மாணவன் இன்று பலாங்கொடை காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார். மேலதிக விசாரணைகளை பலாங்கொடை காவற்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.










