தேசிய விளையாட்டு விழாவில் தொடர்ந்து எட்டு வருடங்களாக ‘போடைஸ் உதைப்பந்தாட்ட மகளிர் அணி’ நுவரெலியா மாவட்ட சாம்பியனாக தெரிவாகியுள்ளது.
விளையாட்டுத்துறை அமைச்சால் வருடாந்தம் நடாத்தப்படும் தேசிய விளையாட்டு விழாவில் கடந்த எட்டு வருடங்களாக பிரதேச மற்றும் மாவட்ட ரீதியில் சாம்பியனாக திகழ்கின்றது போடைஸ் அணி. கடந்த 5 ஆம் திகதி நடைபெற்ற போட்டியிலும் வெற்றிவாகை கூடியது.
2013 ஆம் ஆண்டு மாகாண மட்ட போட்டியில் மத்திய மாகாண சாம்பியனாக தெரிவு செய்யப்பட்டு தேசிய மட்ட போட்டியில் பங்குப்பற்றியிருந்தனர் ,
கடந்த நான்கு வருடங்கள் ( 2016, 2017 ,2018 , 2019 ) மாகாண மட்டத்தில் இரண்டாம் இடத்தை தக்க வைத்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது .
மலையக இளைஞர்கள் தேசிய மற்றும் சர்வதேச ரீதீயில் சாதனை படைக்க இவ்வாறான போட்டிகளின் மூலமே வாய்ப்பு இருக்கின்றது.
எனவே எமது இளைஞர் யுவதிகள் சாதனைகள் படைக்க அவர்களுக்கு தேவையான வளங்கள் பகிரப்பட வேண்டும் . இவர்களுக்கு தேவையான வளங்களும் பயிற்சிகளும் வழங்கும் பட்சத்தில் தேசிய மற்றும் சர்வதேச சாதனை என்பது மிக தூரத்தில் இல்லை என்பதே நிதர்சனம்.
போடைஸ் மகளிர் அணியின் வெற்றிகளுக்கு வாழ்த்துகள்.