சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் கூட்டணியின்கீழ் பொதுத்தேர்தலில் போட்டியிடுவதற்கு தமிழ் முற்போக்கு கூட்டணி தீர்மானித்துள்ளது.
தமிழ் முற்போக்கு கூட்டணியின் அரசியல் உயர்பீடக் கூட்டம் இன்று கொழும்பில் நடைபெற்றது.
இக்கூட்டத்தின் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே கூட்டணியின் தலைவர் மேற்படி தகவலை வெளியிட்டார்.
“ மேல் மாகாணத்தில் கொழும்பு, கம்பஹா, களுத்துறை ஆகிய மாவட்டங்களிலும் சப்ரகமுவ மாகாணத்தில் இரத்தினபுரி, கேகாலை ஆகிய மாவட்டங்களிலும் மத்திய மாகாணத்தில் நுவரெலியா, கண்டி ஆகிய மாவட்டங்களிலும் ஊவாவில் பதுளை மாவட்டத்திலும் முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை நிறுத்தவுள்ளது.” – என்வும் மனோ கூறினார்.