8 வயது சிறாரை ஆற்றில் வீசிய கிராம சேவகர் கைது!

பொல்காவெல, உடபொல கிராம சேவகர் பிரிவில் பணியாற்றும் கிராம சேவகர், பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

8 வயது சிறுவர் ஒருவரை ஆற்றில் தூக்கி வீசிய குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

யானையொன்று ஆற்றில் குளிப்பதை, கரையில் இருந்து 8 வயது சிறுவர் ஒருவர் கண்டுகளித்துள்ளார்.

அவ்விடத்துக்கு மதுபோதையில் வந்த குறித்த கிராம அதிகாரி, குழந்தையை தூக்கி ஆற்றுக்குள் வீசியுள்ளார்.  இதனால் 8 வயது சிறாருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

கைதாகியுள்ள 54 வயதுடைய கிராம சேவகர்,  நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவுள்ளார்.

Related Articles

Latest Articles