” என்மீதுள்ள தவறான புரிதலால் ‘800’ படத்தில் இருந்து விலக வேண்டும் என நடிகர் விஜய் சேதுபதிக்கு சிலர் தரப்பில் இருந்து கடுமையான அழுத்தம் தருவதை நான் அறிகின்றேன். எனவே, என்னால் தமிழ் நாட்டின் ஒரு தலைசிறந்த கலைஞன் பாதிக்கப்படுவதை நான் விரும்பவில்லை. அதுமட்டுமல்லாது விஜய் சேதுபதியின் கலைப் பயணத்தில் வருங்காலங்களில் தேவையற்ற தடைகள் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதையும் கருத்தில்கொண்டு அத்திரைப்படத்தில் இருந்து விலகிக்கொள்ளுமாறு அவரை கேட்டுக்கொள்கின்றேன்.
இவ்வாறு இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் முத்தையா முரளிதரன் கோரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பில் அவர் விடுத்துள்ள அறிக்கை வருமாறு,